என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே,
வணக்கம். வலைப்பதிவு தொடங்க வேண்டுமென்பது எனது நீண்ட காலக் கனவு. என் இதயத்தில்
ஓயாது அலையெழுப்பிக் கொண்டிருக்கும் எண்ண அலையோசைகளுக்கு வடிவம்
கொடுத்து அவற்றை என்னின உலகத் தமிழர்களோடு
பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற தணியா வேட்கை தனல்விட்டு எரிந்துகொண்டிருந்தது
எந்நேரமும்.
வலைப்பதிவு தொடங்க வேண்டும் என்ற ஆவல் இதயம் முழுவதும் நிரம்பி வழிந்ததே ஒழிய, அதனைச் செயல்படுத்தத் தேவையான
தகவல் தொழில்நுட்பத் திறன்களை நான் பெற்றேனில்லை. இந்தக் குறைமனப்பான்மையிலேயே
காலம் கரைந்துவிட்டது.
2009 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை சார்பாகத் தஞ்சைப்
பல்கலைக் கழகம் ஆண்டுதோறும் சிறந்த தமிழிலக்கியப் படைப்பிற்குக் ‘கரிகாலன் விருது’ வழங்கிச் சிறப்பித்து வருகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டிற்கான, அந்தப்
பெருமதிப்புக்குரிய
இலக்கியப் பரிசாம் கரிகாலன் விருது பெற்ற சிங்கை எழுத்தாளர் அன்புச் சகோதரி
திருமதி கமலாதேவி அரவிந்தன் அவர்கள் எந்நேரமும் என்னை வற்புறுத்தியதன்
காரணமாகவும் நண்பர் ஒருவர் உதவி செய்ய முன்வந்ததாலும் எனது இந்த
சுந்தரவனம் வலைப்பதிவு இணைய
உலகத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறது.அவ்விருவருக்கும் யான்
என்றென்றும்
நன்றியுடையேன்.
தமிழ் எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், இளையர்கள், சமூகத்தலைவர்கள் முதலியோர் தம்
படைப்புகளை அனுப்பி எனது கன்னி முயற்சிக்கு ஆதரவு தர வேண்டுமாய் அன்போடு வேண்டிக்
கொள்கிறேன். தமிழ்மொழி, இலக்கியம், தன்னார்வம் போன்ற துறைகளை ஒட்டிய
படைப்புகளை மட்டுமே அனுப்பி வைக்குமாறு அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.
இளையர்கள் முனைப்போடு படைப்புக்களை அனுப்ப வேண்டுவது அவசியம். அவர்களின்
படைப்புக்களை உலகத் தமிழர்கள் படிக்கவும் அது பற்றிய எண்ணங்களை அவர்கள் பகிர்ந்து கொள்ளவும்
வாய்ப்பு இருக்கின்ற காரணத்தினால், படைப்பாளர்கள் தம்
படைப்புக்களை மெருகேற்றிக் கொள்ள இது ஓர் அரிய தளமாக அமையும். அதனால், இளையர்கள் தயங்காது எழுத
வேண்டும்.
சுந்தரவனம் பூத்துக்
குலுங்க உரமாய் இருப்பீர் உலகத் தமிழர்களே!
அன்புடன்,
பொன் சுந்தரராசு
மின்னஞ்சல்: ponsun08@gmail.com
ஐயா அவர்கட்கு தமிழ் நாட்டிலே பிறந்து வளர்ந்து தமிழ் தண்ணீரை அருந்தி கொண்டிருக்கும் தமிழர்கள் தமிழை துச்சமாக நினைத்து ஆங்கிலம் ஹிந்தி என்று மாற்று மொழி பேசினால்தான் மரியாதை என்று நினைத்து நாவிலே ஆங்கிலம் பேசி பொழுதை ஊட்டும் அத்துனை தமிழர்களுக்கும் உங்களை போல வளர்ந்த நாட்டில் வளர்ந்த உங்களை போன்ற தமிழ் அறிஞர்கள் தமிழின் பெருமையை தூக்கி நிறுத்தவும் அதன் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டவும் நீங்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு என் நன்றிகள் பல தெருவித்து கொள்கிறேன் ...உங்களின் இந்த நெடுந்தூர பயணம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று வாழ்த்தும் உங்கள் மகன் தியாகு சிங்கப்பூர்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி. தொடர்ந்து படியுங்கள். அதுவே பெரும் ஆதரவு.
ReplyDelete