Friday, August 2, 2013

என் உறக்கம்


  


இருளில்  வழிதவறி
எங்கோ
அலைந்து கொண்டிருக்கலாம்

வரும் பாதைகளில்
யாரோ விரித்த
இமைக் கண்ணிகளில்
சிக்கியிருக்கலாம்

மதுவாய்க்
கண்ணாடிச் சிறைகளில்
அடைக்கப் பட்டிருக்கலாம்

விழிகள் என்று நம்பிப்
பூக்களில்
விழுந்திருக்கலாம்

நட்சத்திரங்களுக்குத்
தூக்கம் போதிக்கத்
தொலைதூரம் பறந்திருக்கலாம்

தூக்க மாத்திரைகளாய் மாறிக்
கடைகளில்
விற்பனையாகிக் கொண்டிருக்கலாம்

விடியும் வரை
விழிக் கூடுகளுக்குத் திரும்பி வராத
என் உறக்கம்



ஆசியான் எழுத்து விருது பெற்ற கவிஞர்
க.து.மு.இக்பால்

No comments:

Post a Comment