Friday, August 2, 2013

ஒரு வழிதான் இருக்கிறது!..






கொஞ்ச நாட்களாக மாலா அமைதியாக இல்லை. எதையோ பறிகொடுத்தவள்போல் வீட்டில் அமர்ந்திருந்தாள். அதை அவளுடைய அம்மா யமுனா கவனித்தாள். மாலாவிடம் கேட்டபோது ஒன்றுமில்லை என்று சொல்லி மழுப்பிவிட்டாள். உண்மையில் மாலா தன் அம்மாவிடம் பொய் சொன்னாள். பொய் சொல்லக் கூடாது என்று  அவளுக்குத் தெரியும். ஆனால்!.....

‘என்னுடைய நெருங்கிய தோழி  போதைப்  பொருள் உட்கொள்கிறாள் என்று அம்மாவிடம் எப்படிக் கூறுவது? மேலும் நானும் போதைப் பொருள் உட்கொண்டதை அம்மாவிடம் சொன்னால், அம்மா என்ன சொல்லுவார்? அவர் தாங்கிக் கொள்வாரா? இல்லை. இது அம்மாவுக்குத் தெரியக் கூடாது’ என்று முடிவு செய்தாள். காலப்போக்கில்  இந்தப் பழக்கத்தை எப்படி விடுவது? என்று யோசித்தாள். ‘இந்தப் பழக்கத்தை அவ்வளவு சுலமாக விட முடியாது. அது நடக்காவிட்டால் நான் குடும்பத்தில் இருக்க மாட்டேனே! ஏன்? ஏன்?..’

அன்று மட்டும் அவள் அவ்வழியாகப் போகாதிருந்தால்!..

அப்போதுதான் மாலா துணைப்பாட நடவடிக்கை முடித்துவிட்டுத் தன் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தாள். அவள் மிகவும் சோர்வாக இருந்தாள். அதனால், அவள் யாரும் அதிகம் பயன்படுத்தாத ஒரு குறுக்கு வழியின் மூலமாக  வீட்டுக்குச் செல்ல  முடிவு செய்தாள். அவள் நடந்து கொண்டிருக்கும்போது சில குரல்களைக் கேட்டாள். 

“ஆகா, முகர்ந்து பார். மிகவும் நன்றாக இருக்கிறது! ”
“ அப்படியா? எனக்கும் கொடு..”
“ ம்ம்... தூக்குதே!”

‘யாராக இருக்கும்?...’

ஐயத்துடன் மாலா திரும்பிப் பார்த்தாள். அவளுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.  அவளுடைய நெருங்கிய தோழி கலாவும் மற்ற சில பெண்களும் போதைப் பொருள் உட்கொண்டிருந்தார்கள். மாலா பயந்து போனாள். அவள் அங்கிருந்து ஓட ஆரம்பித்தபோது கலா அவளைப் பார்த்துவிட்டாள்.

“ஏய் மாலா இங்கே வா. இதை அனுபவித்துப் பார். மிகவும் நன்றாக இருக்கிறது!..” கலா கூப்பிட்டாள்.

“இ..இ.. இல்லை. வே.. வேண்டாம்!..”  மாலா தட்டுத் தடுமாறிக் கூறினாள்.

“சும்மா, வா. பயப்படாதே....” என்று சொல்லிக் கொண்டே ஒரு சிறு பையில் இருந்த போதைப் பொருளைக் காட்டினாள்.

வேண்டாம் என்று மறுப்பதற்குள் மாலாவின் வாயில் வெள்ளைத் தூளைப் பலவந்தமாகக் கொட்டினாள் கலா. அதைத் துப்பி விடாமல் இருக்கக் கலா, மாலாவின் வாயை மூடினாள். மாலா அதை உட்கொண்டபோது அவள் கண்கள் பெரிதாயின.

“ஆஹா!  ரொம்ப ஜாலியா இருக்கு!..” மாலா உளறினாள்.

கலா தன் நண்பர்களுக்கு அவளை அறிமுகம்  செய்து வைத்தாள்.

அன்றிலிருந்து மாலாவும் பள்ளி முடிந்து  தினமும்  அந்தப் பெண்களோடு சேர்ந்து போதைப் பொருள் உன்கொள்ள ஆரம்பித்தாள்.  ஏன் தாமதாக வீட்டிற்கு வருகிறாய் என்று அவளுடைய அம்மா கேட்கும் போதெல்லாம்  துணைப்பாட வகுப்பு இருந்தது என்பாள்.

ஒரு நாள் அவருடைய வகுப்பாசிரியர்,  “தலைமையாசிரியர் உன்னைப் பார்க்க விரும்புகிறார். போய்ப் பார்!..” என்று கூறினார். மாலா அச்சத்துடனும் தயக்கத்துடனும் தலைமையாரியர்  அலுவலகத்துக்குப்  போனாள்.

அங்கே!..

அவளுடைய அம்மா ஒரு புகைப்படத்தைக் கையில் வைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார். மாலா அப்புகைப்படத்தைப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தாள். அப்புகைப்படத்தில் மாலா தன் தோழிகளோடு போதைப் பொருள் உட்கொள்ளும் காட்சி தெளிவாக இருந்தது.

மாலா அழுதுகொண்டே அங்கிருந்து ஓடினாள். அவளுடைய அம்மா “மாலா நில்!..” என்று பின்னாலிருந்து கத்தியதை அவள் பொருட்படுத்தவில்லை.

‘இது அம்மாவுக்கு எப்படித் தெரிய வந்தது? எப்படித் தெரிய வந்தது?..’ அந்தக் கேவ்வியே மீண்டும் மீண்டும் அவள் மனத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.

‘அதைச் சரி செய்ய ஒரு வழிதான் இருக்கிறது..’ 

மாலா, பக்கத்தில் இருந்த ஓர் அடுக்குமாடி வீட்டின் எட்டாவது மாடிக்குச் சென்றாள். கீழே பார்த்தாள். அவள் தலை சுற்றியது. அவள்  ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். தன் புத்தகப் பையைத் தூக்கிக் கீழே எறிந்தாள்,






சிவானுஜா, R4
சிங்கப்பூர்க் கலைப் பள்ளி


முற்றும்


No comments:

Post a Comment