பொன் சுந்தரராசு
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்
இவர் 1963ஆம் ஆண்டு (தம் இளவயது) முதல் எழுதி கதை, கட்டுரை, நாடகம் முதலிய துறைகளில் எழுதி வருகிறார். இதுவரை என்னதான் செய்வது?, புதிய அலைகள், உதயத்தை நோக்கி, சுந்தரராசுவின் படைப்புகள் (700 பக்கங்கள்) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். என்னதான் செய்வது?, புதிய அலைகள் ஆகிய இரண்டு சிறுகதை நூல்களும் சிங்கப்பூரில் மூன்று பதிப்புகள் வெளியாகி உள்ளன. பொன் சுந்தரராசு தம் இலக்கியப் படைப்புகளுக்காக நிறையப் பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார்.